கடலோரக்கவிதை 21 -25

கடலோரக்கவிதை 21 -25

அத்தியாயம்-21

தேவாவை போலீஸ் அழைச்சுட்டுப்போனதும் நித்யா" ஏன்பா உங்களுக்கு இவ்வளவு கோபம்,அவங்களே போயிருப்பாங்கதான. இப்போ எதுக்கு தேவாவை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்தீங்க"

அதுவரைக்கும் ஓரளவு அமைதியாக பேசினவர் இப்போ நித்யாவை அடிக்க கையோங்கினார்"என்ன நினைச்சுட்டிருக்க உன் மனசுல .எனக்கு என் குடும்ப மானமும், என் கௌரவமும்தான் முக்கியம்,எவனும் எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன"

அப்பா ப்ளீஸ்பா நான்தான் நீங்க சொல்றதை கேட்டனே; தயவு செய்து அவரை விடச் சொல்லுங்கப்பா,அவங்க பாவம்பா என்று அவரது காலைபிடித்து அழவும்,தனது போனை எடுத்து சகாயத்துக்கு அழைத்தவர் அந்த தேவாவை போலீஸ்ல பிடிச்சு கொடுத்தாச்சு இனி அவனை நீங்க பார்த்துக்கோங்க" என்றார்.

இங்க டீ.சி வேற சகாயத்துக்கு சொந்தக்காரன் கேட்கவா செய்யணும் தேவாவை லேசாக போலீஸ் முறையில் கவனித்திருந்தனர்.

அதற்குள் விசயம் கேள்விப்பட்டு மரியதாஸ் ஓடிவந்தவர் ஸ்டேஷன் வந்து தன் மகனைப் பார்க்க தேவாவின் முகமெல்லாம் வீங்கியிருந்தது,ஒரு சேரில் இருத்தி வைத்திருந்தனர்.

மரியதாஸ் நேராக இன்ஸ்பெக்டரிடம் வந்து என் பையன் மேல கை வச்சிருக்கீங்க,ம்ம் அப்படியென்ன என் பையன் தப்பு பண்ணிட்டான் என்று கோபத்தில் கேட்கவும்.

சாரி சார் பெரிய இடத்துல இருந்து உத்தரவு சார், நாங்க என்ன செய்யமுடியும் சார் என்றதும்.

ஓஓஓ...தப்போ சரியோ பெரிய இடத்தில் இருந்து உத்தரவு வந்தால் பிள்ளை அடிப்பீங்களா? இந்த ஊரில் பிறந்து வளர்ந்த எங்ககிட்டயே உங்க விளையாட்டை விளையாடுறீங்க பார்க்கலாம் எவ்வளவு நாளைக்குனு.

எதுக்கு இவ்வளவு பிரச்சனை என்று விபரம் கேட்டவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

நித்யாவா!தேவாகூட வாழப்பிடிக்கலைனு சொன்னா?என்று அவருமே அதிர்ந்தார்.அப்படியே தன் மகனைப் பார்க்க தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான்.

மரியதாஸ் இப்போது இன்ஸ்பெக்டரிடம் விபரத்தைக் கேட்டவர்: இரண்டு பேருக்கும் ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம் நடந்திருக்கு, திடீரென்று அந்த பொண்ணு வேண்டாம்னு சொன்னா அது எப்படி செல்லுபடியாகும். அவன் பொண்டாட்டியை வாழ கூப்பிடுற உரிமை தேவாவுக்கு இருக்கதான செய்து;அத எப்படி தப்புனு சொல்லி இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க;இது எந்த வகையில் நியாயம் என்றவர்.உடனே தங்களது வக்கீலுக்கு பேசியவர் அவரை வரச்சொன்னார்.

அவர் அங்கிருக்கவும் அவருக்கு தெரிந்த அரசியல் பிரமுகர்களும் வந்துவிட பிரச்சனை பெருசாகியது.உடனே சிவசுக்கு அழைத்து பேசினார் இன்ஸ்பெக்டர்.

அப்போதுதான் சிவசு நித்யாவை அழைத்தவர் "இங்கப்பாரு ஸ்டேஷன் போறோம். அங்க வந்து ஒழுங்கா நான் சொல்ற மாதிரி சொல்லணும்,இல்லை அவன் உயிர் என் கையிலப் பார்த்துக்கோ" என்றவர் நித்யாவை அழைத்துக்கொண்டு ஸ்டேஷன் வந்து சேர்ந்தார்.

நித்யாவோ யாரையும் பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் வந்தாள்.அவள் வந்ததும் தேவா உடனே அவளைத்தான் பார்த்தான்.

சிவசு வந்தவுடனே சாடினார் "எதுக்கு சார் எங்களை இங்க அழைச்சீங்க.என் பொண்ணுக்கு தான் இந்த ரௌடி கூட வாழ விருப்பமில்லாம வந்துட்டாளே.மறுபடியும் ஏன் பிரச்சனை பண்றாங்க" என்று சத்தம்போட்டார்.

மரியதாஸ் "வார்த்தைகளை கவனமா பேசுங்க,என் மருமகளுக்காக மட்டும் தான் நீங்க பேசுறத பொருத்துட்டு போறோம். இல்லேன்னா கல்லை கட்டி கடலில் தாத்திருவோம் அமைதியா இரு" என்றதும்.

 சிவசுக்கு கொஞ்சம் பயம்வந்தது மரியதாஸுடன் பேசுறதுக்கு, அதுக்குதான் இவ்வளவு குள்ள நரி வேலை செய்து தன் மகளை தேவாவிடமிருந்து பிரித்தார்.

இன்ஸ்பெக்டர் இருவரையும் அழைத்து விவரத்தைக் கேட்டார் இறுதியாக முடிவை நித்யாவிடம் விட்டுவிட்டனர்.

ரொம்ப நேரம் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக குனிந்தவாக்கிலயே இருந்தவள்.பின்" எனக்கு தேவாகூட வாழ விருப்பமில்லை" என்றதும்,தேவாவின் மனம் கலங்கி அப்படியே அவளையே பார்த்திருந்தான்.ஏன்டி ஏன் இப்படி என்று மனதிற்குள்ளாக நொருங்கிப்போனான்.

அதை எழுத்து மூலம் ஒப்புதல் வாங்கி,நித்யா அதில் கையெழுத்திட,அடுத்து தேவாவிடமும் கையெழுத்து கேட்க.

"அவளுக்கு வேணும்னா இந்த கல்யாணமும் வாழ்க்கையும் விளையாட்டாக இருக்கலாம். எனக்கு அப்படியில்லை,அவ எங்கயும் போய் நல்ல வாழட்டும். ஆனால் இறுதிவரை அவதான் என் மனைவி, கையெழுத்து எல்லாம் போட்டு தர முடியாது. இனி என்னால எந்த தொந்தரவும் அவளுக்கு இருக்காது" என்றவன் அங்கிருந்து வெளியே வந்துவிட்டான்.

மரியதாஸ் நித்யாவிடம் வந்து" உன்கிட்டயிருந்து இதை எதிர்பார்க்கலைம்மா.எங்கயிருந்தாலும் நல்லாயிரு" என்று வந்துவிட்டார்.

சிவசு நித்யாவை தன் கைப்பிடியிலயே வைத்திருந்து அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.கையைவிட்டாகூட தேவாகூட போயிடுவானு தெரியும் அதனால்தான்.

வீட்டிற்கு வந்ததும் நித்யா தன் தகப்பனிடம் நீங்க என்னோட உயிரையே பிரிச்சு கூட்டிட்டு வந்திருக்கீங்க இனி உங்க அக்கா பையனை கட்டிப்பேன்னு கனவுல கூட நினைக்காதீங்க.தேவாவுக்கு உங்களால எதுவும் ஆகிடக்கூடாதுனுதான் நீங்க சொன்னதெல்லாம் கேட்டேன்.அதுக்காக இன்னொருத்தனை ஏத்துப்பேனு நினைக்காதீங்க என்றவளை அறைந்திருந்தார்.

 

நீங்க அடிச்சாலும் கொன்னு போட்டாலும் இதுதான் என் முடிவு.என்ன நடந்தாலும் தேவா எனக்காகத்தான் காத்திருப்பாங்க வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க.என்னைத் தேடி வருவாங்க என்றவள் அறைக்குள் சென்று முடங்கிவிட்டாள்.

ஏற்கனவே சிவசுவிற்கு கும்பகோணத்திற்கு ட்ரான்ஸ்பர் ஆகிட்டு,அதனால்தான் இவ்வளவு கிரிமினல் வேலையையும் செய்துமுடித்தார்.

அடுத்தநாளே வீட்டை காலிசெய்து கும்பகோணம் சென்றுவிட்டனர்.கிட்டதட்ட இரண்டு வாரங்கள் கழித்து நித்யாவிற்கு தலைசுற்றல் அதிகமாக வரவும் ஏற்கனவே தேவாவையும் அந்த ஊரையும் பிரிந்து வந்ததே அவளுக்கு சாப்பிட மனமில்லாமல் பட்டினியாக கிடப்பாள் அதனாலோ இந்த மயக்கம் என்று நினைத்துவிட்டாள்.

இதில் வேறு நித்யாவின் கடைசி அத்தையும் விசாகனின் அம்மாவும் அடிக்கடி வீட்டிற்கு வருவார்.நித்யா படுத்திருந்தாள் அதைப்பார்த்து " என்ன இப்படி சோம்பேறியா வளர்த்து வச்சிருக்க பொம்பளை பிள்ளைய. அப்புறம் எங்காத்துக்கு வாழ வந்தா இவளுக்கு நான் சேவகம் செய்யணும் போலிருக்கே" என்று பேசுவும்தான் ஜானகி மகளிடம் வந்து " இங்க நம்ம விருப்பத்துக்கு கூட தூங்க முடியாது,சாப்பிட முடியாது,எழுந்து கொஞ்சமாச்சும் வெளிய நடமாடு வேலை செய்,உங்கப்பாவை மீறி எதுவும் செய்யமுடியாது,அவரு சொல்றத கேளுடி" என்க.

உனக்கும் உன் ஆத்துக்காரர் மாதிரி மனசாட்சியே இல்லையாம்மா,உனக்கு எப்படி அவர் முக்கியமோ அதப்போலதான எனக்கு தேவா முக்கியமா இருப்பார்.உன் ஆத்துக்காரர்கிட்ட சொல்லிவை செத்துப்போனாலும் போவன தவிர. அவர் அக்கா பையனை கட்டிக்கமாட்டேன்.என்கிட்ட பேசாதம்மா தயவு செய்து என்றுவிட்டாள்.

அதைவிட அவளுக்கு தேவாவை பார்க்கணும்போல இருந்தது.தேடி வந்திடமாட்டானா என்று ஏக்கமிருந்தது.அவனது நன்மைக்காக விலகி வந்துட்டாளஏ தவிர, அவளால் அவனில்லாது,அவனது அருகாமை இல்லாது தினம் தினம் வேதனைப்பட்டாள்.அவனை நினைத்து நினைத்து கண்ணீர்விட்டாள்,அவளது உடலுக்குள் நடக்கும் மாற்றங்களை உணரும் நிலையில் அவளில்லை இப்பொழுது.

அதற்குள் சிவசுவின் உண்மையான சுயரூபம் தெரியும் நாளும் வந்தது.அவளுக்கு அடிக்கடி வாந்தி வர ஆரம்பித்தது,வெளியேவும் போகமுடியாது வீட்டுசிறையில் இருக்கினாறாள்.வாந்தி வருவதை மறைத்தாள்.அவளுக்கே சந்தேகமாக இருந்தது.இதை வீட்ல சொன்னோம் கண்டிப்பா அப்பா வேற எதாவது முடிவெடுத்து அதையும் செய்ய வச்சிருவார் என்று புத்தியை பயன்படுத்தியவள் தன் அம்மாவிடம்கூட சொல்லவில்லை.

சும்மாவே சாப்பாட்டை ஒதுக்கியவளுக்கு இப்போது அது கஷ்டமாக இல்லை,ஜானகிக்கு தன் வாழ்க்கை தன் கணவர் என்று பார்ப்பதற்கே சரியாக இருந்தது.

தூத்துக்குடியிலிருந்து வந்து கிட்டதட்ட இரண்டு மாதத்திற்குமேல் கடந்த நிலையில் ஒருநாள் நித்யா பின்பக்கம் வாந்தி எடுத்துக்கொண்டு மயங்கி விழுந்திருந்தாள்,நித்யாவை காணவில்லையே என்று தேடிவந்த ஜானகி அவளைப் பார்த்து பதறி தூக்கி அவளை வீட்டிற்குள் அழைத்து வந்தவள்..என்னாச்சுடி உனக்கு என்று கேட்கவும் அமைதியாக இருந்தவளிடம் பதில் சொல்லுடி என்று அதட்ட.

மூணு பிள்ளை பெத்த உனக்கு தெரியாதா கல்யாணம் நடந்த ஒரு பொண்ணுக்கு என்ன கிடைக்கும்னு என்றதும்...என்னடி உளறுற என்று தன் நெஞ்சில் கைவைத்தவர் " உங்கப்பாவை எப்படி சமாளிக்கப்போறோம்னு தெரியலையே,கல்யாணம் நடந்ததையே பொறுக்கமுடியாமல் அத்தனை ட்ராமாபண்ணி உன்னை பிரிச்சிட்டு வந்தாரு"

என்னது ட்ராமா பண்ணியா என்று அதிர்ந்தவள் அவளது அம்மாவை முறைத்து பார்த்து " நீயும் அவருக்கூட சேர்ந்து ட்ராமா போட்டிருக்க அப்படித்தான.உண்மையிலயே நீதான் என்னை பெத்தியாமா. அவருதான் என் வாழ்க்கைய இப்படி கெடுத்துட்டாருனா,நீ ஏன்மா இப்படி செய்த.உனக்கு உண்மையிலயே என் மேல பாசமில்லையா" என்று தன் முகத்தை மூடி அழவும்.

ஜானகி"நான் என்னடி செய்யமுடியும்,அவரு சாகாயத்துக்கிட்ட உன்னை அழைச்சுட்டு வர்றதுக்கு சொல்லிட்டு,இங்க பெட்ரோலும் தண்ணியும் மிக்ஸ் பண்ணி வச்சுட்டு,தீப்பட்டிய வேற நனைச்சுத்தான் வச்சிருந்தார்.எங்க தெரியாமகூட பத்திக்ககூடாதுனு எல்லாம் முன்னேற்பாடு பண்ணி வச்சிருந்தார்.உண்மையை சொன்னா எங்களை கொன்றுவார்,என்ன என்னடி பண்ண சொல்ற,உனக்கடுத்து ஒருத்திய பெத்துவச்சிருக்கேன்டி அவளையும் பார்க்கணும்லாடி என்று அழுதார்.

நித்யாவோ எதுவுமே பேசாமல் தனது அம்மாவையே பார்த்திருந்தவள்" இவ்வளவு நாளும் எப்படி உன் ஆத்துக்காரருக்கு உண்மையா இருந்தியோ அதே மாதிரி உன் பொண்ணுகிட்டயும் கொஞ்சம் பாசமா இரும்மா,எனக்காக ஒன்னே ஒன்னு பண்ணு,என்னை ஹாஸ்பிட்டலுக்கு மட்டும் உன் வீட்டுக்காரருக்குத் தெரியாம கூட்டிட்டு போ,இந்த உதவிய நான் சாகற வரைக்கும் மறக்கமாட்டேன்" என்று கையெடுத்துக் கும்பிடவும்…

ஜானகிதான் அவளது கையை பிடிச்சுட்டு என்னடி இது என்று அவளது கையை கீழிறக்கியவர்,வா கிளம்பு போகலாம் உங்கப்பா வரதுகுள்ள போயிட்டு வந்துடுவோம் என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்து போகிற தூரத்திலிருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார்.

அங்கே நித்யாவை பரிசோதித்த டாக்டர் சத்தம் போட்டார் என்னம்மா இது நாலு மாசமாகுது இப்போதான் ஹாஸ்பிட்டல் வரணும்னு தோணுச்சா உங்களுக்கு என்றவர் அவளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார்.

நித்யாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியாதநிலை தான் கர்பாமாக இருப்பதை தேவாவிற்கு சொல்லமுடியாத நிலையை எண்ணி எண்ணியே அழுதுகுமைந்தாள்.

ஜானகியிடம் கூறிவிட்டாள்" இந்த விஷயம் மட்டும் அப்பாவுக்கு இப்போதைக்கு தெரியக்கூடாது,இன்னும் ஒருமாசம் போகட்டும்,தெரியும் போது தெரிஞ்சுக்கணும்" என்றுவிட்டாள்.

அடுத்த ஒருவாரத்தில் நித்யாவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார் சிவசு இங்கு மனைவி பிள்ளைகளிடத்தில் எதுவும் ஆலோசிக்கவில்லை,அதுவும் நித்யா அவர் கண்ணில் தென்படுவதேயில்லை, அவர் இருக்கும் நேரத்தில் அவள் வெளியே வருவதில்லை. பத்திரிக்கை எல்லாம் அடித்துக்கொடுத்தாகிவிட்டது,

அடுத்தவாரம் திருமணம் என்ற நிலையில் விசாகன் நித்யாவின் வீட்டிற்கு வந்தவன் நித்யாவிடம் பேச எத்தனிக்க அவளிடம் எதோ மாறுதல் தெரியவும் சந்தேகமாகப் பார்க்க.

"என்ன மிஸ்டர் விசாகன் அடுத்தவன் பிள்ளைக்கு இனிஷியல் கொடுக்க ரெடியாகிட்டீங்கப்போல "என்று நித்யா நக்கலாக கேட்கவும்.

என்னடி பேசுற நீ என்று அவன் கோபத்தில் கேட்க.

என்னது டி யா.அது என் ஹஸ்பண்ட் மட்டும் என்னை கூப்பிடணும் நீயெல்லாம் இல்லை புரியுதா,ஏற்கனவே கல்யாணமாகி மாசமா இருக்கற என்னை கட்டிக்க சம்மதிச்ச உன்னைமாதிரி ஆளுங்களை என்ன செய்யலாம் என்று கேட்கவும்.

"உனக்கு கல்யாணமாகிட்டுதா"

"ஆமா கல்யாணம் முடிஞ்சு நான் கர்ப்பமா இருக்கேன்.அதுவும் ரிஜிஸ்டர் மேரேஜ்"

விளையாடத நித்யா என்றவன் ஜானகியைப் பார்க்க அவரும் ஆமாம் தம்பி என்று உண்மையை போட்டுடைக்க.

அவ்வளவுதான் அது அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தெரிந்து சிவசுவை அழைத்து நேரடியாக கேட்க.அவர் வீட்டில் வந்து ஜானகியைத்தான் அடித்தார் கூடவே இருந்து குழிபறிக்குறியா என்று.

ஜானகி இன்றுதன் மகளுக்காக தன் தலையை நிமிர்த்தினார்" ஆமா அன்னைக்கு நீங்க தற்கொலை பண்ணிப்பேன் சொன்னதுனால உங்கபக்கம் நின்னேன்,இப்போ என் பெண்ணோடு வாழ்க்கைக்காகவும் உயிருக்காகவும் அவ பக்கமா நிக்குறேன் அதுல என்ன தப்பு என்று முதன் முறையாக தன் கணவனை எதிர்த்து நின்றார்.

இரவு சிவசுவின் அக்கா வந்து தன் தம்பியிடம் சண்டை போட்டார்,இப்படிபட்ட பிள்ளைய எப்படி என் பையன் தலையில் கட்டப் பார்த்த.உன் வீட்டு சங்காத்தமே வேண்டாம் எனக்கு இப்படி ஒரு பொண்ணு இருந்தா விஷம் வச்சு கொன்றுப்பேன். நீயெல்லாம் என்ன ஆம்பிள்ளை என்று வாயில் வந்ததைப் பேசிச்செல்ல,குடும்பத்திற்கு மட்டுமல்ல ஊருக்கே தெரிந்துவிட்டது நித்யாவின் கல்யாண விவகாரமும் சிவசுவின் நரிப்புத்தியும்.

இரண்டுநாள் அமைதியாக இருந்தவர் மூன்றாம் நாள் இரவு மெல்ல தன் மனைவியை அழைத்து நித்யாவின் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுக்க சொன்னார்.

ஜானகி பெத்த பிள்ளைக்கு இப்படி செய்ய சொல்றேனே மாபாவி,உங்க மனசென்ன கல்லா ஆண்டவா. நான் இதை செய்யமாட்டேன் என்று அழுதவளின் முன்பு அந்த சாப்பாட்டை எடுத்து அவர் சாப்பிடப்போக அதை தட்டிவிட்டவர்.

ஏன் இப்படியெல்லாம் செய்ய சொல்றீங்க பெத்தவ என் வயிறு காந்துதுங்க...அவா எங்கயாயவது போய் ஊயிரோடவாவது வாழட்டும் என்று அவரிடம் கெஞ்ச,சிவசுவின் மனம் இறங்கவேயில்லை..

சரி நீ கொடுக்க வேண்டாம் நானே அவளுக்கு கொடுக்குறேன் என்றவர் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு நித்யாவின் அறைக்குள் செல்ல அங்கு அவளைக் காணவில்லை.வீடு முழுவதும் தேடியும் அவளைக் காணவில்லை,என்றதும் எங்க போயிருப்பாள் என்று வெளியேவும் தேடினர்.

ஆனால் நித்யா இருந்ததோ தூத்துக்குடி செல்லும் பஸ்ஸில்,வாந்தியும் மூச்சுமுட்டலுமாக இருக்க பின்பக்கத் தோட்டத்திற்கு வந்தவள் கேட்டது தனது பெற்றோரின் உரையாடலைத்தான்,அந்தக் கணமே மூடிவு செய்து தனது தந்தையின் சட்டையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டாள்.

அத்தியாயம்-22

தேவா நித்யாவிற்கு நடந்த கொடுமைகளை கேட்டதும் அப்படியே ஆடிப்போய் அதிர்ந்திருந்தான்…

இப்படியா ஒரு பெத்த தகப்பன் தன் ஜாதிக்காகவும் கௌரவத்துக்காகவும் பெத்த பெண்ணையே கொல்ல துணிவாரு. இவங்கெல்லாம் தன்னுடைய சுயநலத்திற்காக என்ன வேணாலும் செய்யக்கூடியவர்கள்.ஐயோ என்ன பாடுபட்டாளோ? எவ்வளவு வேதனைபட்டாளோ? என்று அவன் மனம் கசிந்து தன் இரு கைகளையும் தன் தலைக்கு ஈடு கொடுத்து அமர்ந்திருந்தான்.

சிவசு மட்டும் இப்போது அவனது கையில் கிடைத்தார் என்றால் நார் நாராகக் கிழித்து விடுவான்.அதுக்கு முன்னாடி இங்க இருக்க அல்லக்கைகளை கொஞ்சம் கவனிக்க வேண்டியதிருக்கு என்று யோசித்துக்கொண்டே இருக்க.

மரியதாஸ்" சொல்றேனு தப்பா நினைக்காத தம்பி: உன்னுடைய காதலுக்காகவும் உன்னுடைய வாழ்க்கைக்காகவும் நீ என்ன செய்து இருக்க ஒண்ணுமே இல்ல. முதல்லயும் அவ தான்,அவளோட தாய் தகப்பனை விட்டுவிட்டு உன் கூட வந்தாள், ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றதுக்கு. இப்போ உன் மேல இருக்குற காதலுக்கும், அவளோட காதலை நிருபிக்கதான் தன் தகப்பனிடமிருந்து தப்பி ஓடி வந்து மூணு வருஷமா தனிமையா வாழ்ந்துட்டு இருக்கா. இதுல வேற உனக்கு ஒரு பிள்ளையை பெத்து வளர்க்குறா"

அவ போனதும் குடியே உலகம்னு மூணு மாசம் சுத்திட்டு இருந்த நீ என்னைக்காவது அவளைப்பற்றி யோசிச்சியா? அவளுக்கு என்னாச்சுனு ஒரு முறையாவது போய் பார்த்திருக்கியா?

இப்பவும் நான் மருமகளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன்.அவ உன்கூட வாழ விருப்பமில்லைனு சொன்னா அவளோட விருப்பத்துக்கு விட்ருவேன்" என்றதும்

சட்டென்று நிமிர்ந்து தன் தகப்பனின் முகத்தை பார்க்கவும்...அவரோ பின்ன என்னைய என்ன செய்ய சொல்ற.அவளை எந்த சூழ்நிலையில் பார்த்தேன் தெரியுமா.அவங்கப்பன் என்னடா மனுஷன்? அவன் என் கைக்கு கிடைச்சான்னா செதில் செதிலாக வெட்டி சுறாவுக்கு இறையா போட்டுருவேன் என்று கண்கள் கலங்கியவர்.நித்யாவை எப்படி பார்த்தார் என்ற சூழ்நிலையை விளக்கினார்.

தேவா கப்பலுக்கு வேலைக்கு செல்வதற்காக ஏர்போர்ட் கிளம்பும்போது மரியதாஸின் போனுக்கு அழைப்பு வரவும் எடுத்து பேச, தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து தெரிந்த இன்ஸ்பெக்டர் தான் பேசினார்"ண்ணே திருநெல்வேலி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் ஒரு பொம்பள பிள்ளைய அட்மிட் பண்ணிருக்காம்,எதோ பஸ் ஸ்டாண்ட்ல மயங்கி விழுந்திருக்கும் போல,கண்முழிச்சோம் விசாரிச்சதுல உங்க மருமகனு சொல்லிச்சாம் பேரு கூட ஏதோ நித்யானு சொல்லிருக்கு"இதைக் கேட்டதும் மெல்ல தேவா திரும்பி பார்க்க சமாளித்தவர்...நான் ஸ்டேஷன் வர்றேன் என்று போனை வைத்தவர்.

தேவா அந்தப்பக்கம் கிளம்பியதும் இவர் இந்தபக்கமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றவர்:அங்கே எல்லா விவரத்தையும் வாங்கிக்கொண்டு அருளை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி பயனப்பட்டார்.

அங்கு நித்யாவோ அந்த அரசு மருத்துவமனையில் யாருமற்ற அனாதையாக கிடந்தாள்.

தூத்துக்குடி செல்லும் பஸ் திருநெல்வேலிக்கு அதிகாலை வந்து சேரவும் டிரைவர் கண்டக்டர் டீ குடிக்க இறங்கிவிட்டனர்,மெதுவாக கீழிறங்கிய நித்யாவிற்கு வாந்தி வருவது போல இருந்தது,அதுவுமில்லாமல் இவ்வளவு நேரம் பஸ்ஸில் இருந்தது,உடனே கட்டண கழிப்பிடம் நோக்கி சென்றவளுக்கு பசியோ! இல்லை அவளது உடலின் மாற்றமோ அப்படியே தலைசுற்றி மயக்கம் வர அந்த சுவற்றை பிடித்து அப்படியே சாய்ந்தவள் மயங்கிவிட்டாள்.எவ்வளவு நேரமோ தெரியாது; அதிகாலை வேளை என்பதால் உள்ளே சென்ற பெண்ணை காணவில்லையே என்று வெளியே இருந்த அந்த குத்தைகைகாரர் தன் பக்கத்திலிருந்த ஒரு பெண்ணை அழைத்து உள்ளே பார்க்க சொல்ல நித்யா மயங்கியிருக்கவும்,உடனே போலீசுக்கு தகவல் சொல்லி ஆம்புலன்ஸ் வந்து அவளை தூக்கி சென்று அரசு மருத்துவ கல்லூரியோடு சேர்ந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்த நித்யாவை விசாரிக்க, அவள் வேறு ஏதும் சொல்லாது என் கணவர் வீட்டுக்குப் போவதற்காக பஸ்ஸில் வந்தேன்,டாய்லெட்ல மயங்கி விழுந்துவிட்டேன் என்று மட்டும் சொல்லியிருந்தாள்.

உடனே போலீஸ்காரர்கள் அவளிடம் அவளது கணவர் வீட்டு முகவரி கேட்க எல்லாவற்றையும் சொல்லியிருந்தால் விவரமாக மாமனார் இருவர் பெயரையும் மரியதாஸ் அருள் என்றும்,அடுத்து தன் கணவர் பெயர் தேவா என்றும்,அதனால்தான் தகவல் உடனடியாக தூத்துக்குடி சென்றது.

இப்போது நித்யாவிற்கு அகோர பசி,அங்குள்ள சாப்பாடு வாங்கி சாப்பிட பிடிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கையில் வைத்திருந்த பணமும் எங்கு விழுந்ததென்று தெரியாது.அதனால் தேவா வரமாட்டானா என்று ஏங்கி வெளியவே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு தேவா வேலைக்கு சென்றது தெரியாதே.

மாலை வேளையில் தான் மரியதாஸும் அருளும் அவசர அவசரமாக அவளை தேடி உள்ளே வந்தனர். அவளைப் பார்த்ததும் அவள் இருந்த கோலத்தை கண்டதும் மரியதாஸிற்கே பாவமாக இருந்தது.

அங்க இருந்த நர்சுதான் இவர்கள் யார் என்று கேட்டு "என்ன சார் நீங்க ஒரு பிள்ளைதாச்சி பிள்ளையை இப்படியா தனியா பஸ்ல" அனுப்புவீங்க என்று சத்தம் போடவும்தான்.

இருவரும் ஆச்சயர்யத்தில் நித்யாவை பார்க்க நடந்த எல்லா விசயத்தையும் சொன்னாள்:அதை கேட்டவருக்கோ அவ்வளவு ஆத்திரமாக வந்தது.விட்டால் இப்பவே சகாயத்தின் மொத்த குடும்பத்தை வெட்டி சாய்க்க இரண்டுபேரும் தயாராகத்தான் இருந்தனர். என்ன செய்ய பிள்ளைங்க குடும்பம்னு இருக்கே அவங்களை வாழ வைக்கணுமே என்று தான் அமைதியாக தங்களது கோபத்தை அடக்கிக் கொண்டனர்.

நித்யா அவர்கள் இருவருடன் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை வெளியவே சென்று சென்று மீளவும் மரியதாஸ் புரிந்துகொண்டவர் தேவா இங்கில்லை என்று விவரத்தை கூறவும், அவளது முகமே வாடி போயிற்று.

"மெல்ல எனக்கு ரொம்ப பசிக்குது ஏதாவது சாப்பிட வாங்கித் தரமுடியுமா" என்று கேட்கவும்.

மரியாதஸும் அருளும் அழுதேவிட்டனர்,நம்ம வீட்டுப் பிள்ளைக்கு இப்படியொரு நிலையா என்று உடனே அவளை அழைத்துக்கொண்டு ஹோட்டல் அழைத்து செல்ல அது உயர்தர சைவ ஹோட்டல் என்று போர்டு பார்த்ததும் மாமனாரைத்தான் பார்த்தாள்.இவங்களுக்கு நான் என்ன செய்துட்டேன் ஒன்றுமேயில்லையே.மூணு மாசத்துக்கு முன்னாடி வரையாவது அவங்க மகனோட மனைவி,இப்போ அவங்களுக்கு நான் யாருமேயில்லையே,ஆனாலும் எனக்காக பார்த்து பார்த்து செய்ற: இந்த அன்பு கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணுமே என்று எண்ணியவள் உள்ளே சென்று ஆர்டர் செய்து அவசர அவசரமாக பசியில் சாப்பிட்டவளை பார்த்து பார்த்து கண்ணீர்தான் வந்தது.

நம்மை நம்பி ஆயிரம் குடும்பம் பிழைக்குது ஆனா நம்ம வீட்டு வாரிசை சுமந்திட்டிருக்கவளின் நிலைமையை பாரு என்றுதான் நினைத்தனர்.

சாப்பிட்டு முடித்து ஹோட்டலிலிருந்து வெளியே வரவும்

வீட்டிற்கு போக காரில் ஏறுவதற்கு நித்யா தயங்கியவள் "இல்லை மாமா அவங்க எப்படியும் என்னை ஏத்துக்க மாட்டாங்க,நான் செய்தது பெரிய தப்பு,அது வேற அவங்க வேணாம்னு எழுதி கொடுத்துட்டேன்.வீட்லயும் என் மேல கோபமா இருப்பாங்க,நான் இங்க எங்கயாவது வேலை செய்து பிழைச்சுக்குறேன்.எனக்கு அதுக்கு எதாவது வழி செய்து தாங்க" என்று யாசித்து நிற்கவும்.

என்னமா பேசுற நீ எங்க வீட்டுப் பிள்ளை,எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் சமாளிக்கணும் இப்படி ஓடி ஒளியக்கூடாது என்றதும்.

வேண்டாம் மாமா அவங்க வந்து என்னை புரிஞ்சுகிட்டு ஏத்துக்கிட்டா நான் அங்க வர்றேன்.இல்லைனா எனக்கு என் பிள்ளைபோதும். அவங்க இங்க இருக்காங்கனு தான் நான் தூத்துக்குடிவர பஸ் ஏறி வந்தேன். ஒருவேளை கடவுளுக்கே அது பிடிக்கலையோ என்னவோ? பாதியிலேயே என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துட்டாரு, அவங்களும் வெளியூர் போயிட்டாங்க.

அவளது முடிவில் பிடிவாதமாக இருந்தாள்,எவ்வளவோ எடுத்து சொல்லியும் தன்னுடைய முடிவில் அவள் மாறவில்லை.நீங்க ரொம்ப கட்டாயப்படுத்தினா நான் எங்காவது போய்டுவேன் என்று சொல்லவும் தான் வேறு வழியின்றி சம்மதித்தனர்.

அருளு லே நம்ம ஊர்க்காரன் அந்த யோவான் பையன் இருந்தாம்லா,அவனுக்கு இங்கொரு வீடு சும்மாதான்ல கிடக்கு, அது என்னனு இப்பவே விசாரி"

சரி ண்ணே என்றவர் உடனே விசாரித்து இராத்திரியோட இராத்திரியா எல்லா ஏற்பாட்டையும் செய்து; காலையில் அந்த வீட்டில் பால் காய்த்து தன் மருமகளுக்கு என்று எல்லாவற்றையும் செய்து கொடுத்துவிட்டார்.இரண்டே நாட்களில் அந்த வீட்டையே வாங்கிவிட்டார்.

அவளிடம் கவனமாக இருக்க சொல்லிவிட்டு தூத்துக்குடி சென்று தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக விசாரித்து நம்பிக்கையான ஒரு விதவை மாமியை தனது மருமகளுக்கு துணையாக கொண்டு வந்துவிட்டார்.

அவளுக்கு சமையலில் இருந்து எல்லாவற்றிற்கும்,சும்மா இருந்தால் மண்டை கண்டதையும் யோசிக்கும் என்றறிந்தவர் தூத்துக்குடி காலேஜ்ல இருந்து சான்றிதழ்கள் எல்லாம் வாங்கி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்த்துவிட்டார்.

ஒன்பதாம் மாதம் இறுதியிலும் வந்தவர்" ம்மா இந்த நேரத்துலயாவது நம்ம சொந்தங்களோடு வந்திரும்மா,தனியா இருக்க வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்,மனதை கல்லாக்கி கொண்டாள். நாளைக்கே தேவா வந்து வேண்டாம்னு சொல்லிவிட்டாள். மறுபடியும் மனதில் அடிவாங்க தெம்பில்லை என்று தன் முடிவில் உறுதியாக நின்றாள்.

மனதில் காயங்கள் பட பட,அந்த காயங்களில் காய்ப்பு ஏறி கல்லாக போய்விடுமாம் அப்படித்தான் நித்யாவின் மனதும் மாறியிருந்தது….சின்னதொரு ஏக்கம் அடி ஆழத்தில் இருந்தது எனக்கான காதல் அவன் மனதில் மீதியிருந்தால் அவன் வருவான் என்று.

ஆனால் சில நேரங்களில் ரீனா தன் அண்ணனுடன் போனில் பேசும்போது மரியதாஸ் மெதுவாக அவளிடம் நித்யாவை விசயமா எதாவது பேசுடா குட்டி,அண்ணன் என்ன சொல்றானு பார்ப்போம் என்பார்,அவளும் அவளது பேச்சை எடுக்க தேவா அழைப்பை துண்டித்துவிட்டான்.

என்ன செய்ய என்று யோசித்தவருக்கு ஒரு வழியும் புலப்படவில்லை.

ரீனா" ஏன்ப்பா நித்யாவைப் பத்தி அண்ணாகிட்ட பேச சொன்னீங்க,ஏன் நியாபகப்படுத்துறீங்க,அண்ணே பாவம்"

"அதில்லடா குட்டி அண்ணன் வாழ்க்கைய பார்க்கணும்ல அதான்"என சமாளித்தார்.

அந்த நேரத்தில்தான் நித்யாவிற்கு பிரசவ வலி வந்து ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்தனர்.அவளுக்கு அந்த நேரத்தில் அம்மாவைவிட தேவாவின் அருகாமையைத்தான் வேண்டினாள்.அவ்வளவு வலியிலும் வேதனையிலும் தனது வீட்டாரை ஒரு நொடிக்கூட நினைக்கவில்லை தன் பிள்ளை நல்லபடியக பிறக்கவேண்டுமே என்றதொரு பிரார்த்தனை மட்டுமே.

நெடுநேரம் தன் அன்னையை காக்க வைக்காமல் பட்டுகுட்டி நல்லபடியாக பிறந்தாள்,நித்யாவிற்கு அவ்வளவு சந்தோஷம் தேவாவுக்கு பெண்குழந்தைனா ரொம்ப பிடிக்கும்,தனது அக்காக்கள் இருவருக்குமே இரண்டு இரண்டு ஆண்பிள்ளைகள் அதை நிறைய நாள் நித்யாகிட்ட சொல்லிருக்கான் ஒரு பெண் குழந்தை கூட இல்லையே என்று இப்போ அவனுக்கே பெண் குழந்தை பிறந்திருக்கு என்பது நினைத்துதான் சந்தோஷம்.

ஹாஸ்பிட்டலில் வந்து தனது பேத்தியை பார்த்தவர்கள் இருவருக்கும் அப்பவே தங்கள் வீட்டு புதுவரவை உடனே வீட்டிற்கு அழைத்து செல்ல ஆசை.

"தயவு செய்து இப்பவே நம்ம வீட்டுக்கு போயிடுவோம்மா,மரியதாஸ் வீட்டு வாரிசு" என் பூரித்துப்போய் கேட்கவும்.

உங்கவீட்டு வாரிசு உங்க பேத்தியை கொண்டு போங்க என்றதும்...அந்த வார்த்தையின் அர்த்தத்தை புரியாத சின்ன பிள்ளையா அவர்.

மருமகளைப் பார்த்து பெருமூச்சொன்றைவிட்டவர்.அவன் கரைக்கு இழுக்கான் அவன் மனைவியோ தண்ணிக்குள்ள இழுக்கா.ஆக மொத்தம் நம்மா பாடுதாம்லே திண்டாட்டமாயிருக்கு அருளே! என்று விசனப்பட்டார்.இதுக இரண்டும் என்னைக்கு ஒன்னா வாழப்போகுதுங்களோ பனிமய மாதவே நீங்களே இவங்களை சேர்த்து வைங்க என்று நேர்ந்துகொண்டார்.

இந்த வருடங்களில் பட்டுகுட்டி வளர்ந்து தாத்தக்கள் இருவரையும் படுத்தி எடுத்துவிட்டாள். பட்டு குட்டி உருவத்துல மட்டுமில்லை குணத்துலயும் தேவாதான்,கலர் மட்டும் அம்மா மாதிரி அவ்வளவே.

தனது படிப்பை முடித்துவிட்டு இப்போது அங்கிருக்கும் தனியார் பள்ளியில் வேலை பார்க்கிறாள்,பட்டுவை மாமி பார்த்துக்கொள்வார்.

அருளின் விசயம் கேள்விபட்டு தேவா வருகின்றான் என்றதும் தான் தன் மருமகளை இதுக்கு மேலயும் நீ வரலைனா எப்படி. உனக்கு அவன் வேண்டாம்னா பிள்ளை என்ன பாவம் பண்ணிச்சு,அவளுக்கான குடும்பம் அங்கயிருக்கும்போது என்று அவரும் பிடிவாதம் பிடித்து பிள்ளையை தூக்கிக்கொண்டு காரில் ஏறவும் தான் அவளும் வந்தாள்.

இப்போதான் யோசித்தார் இதை முதல்லயே செயதிருக்கணுமோ என்று.நித்யா பின்ன எங்கேயாவது போயிட்டான என்ன பண்றதுனு யோசித்து யோசித்து மனுஷன் மூணு வருஷம் பொறுமை காத்தார் வேற வழியில்லையே.

இதை அவ்வளவையும் கேட்டு முடித்தவன் அவரது வார்த்தைக்காக காத்திருக்காமல் உடனே ஓடிச்சென்று தன் மனைவி இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

அங்க நித்யா இப்பொழுது விழித்திருந்தாள் அவளது அருகில் பட்டுக்குட்டி அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தாள்.அப்படியே கதவின் ஓரமாக சாய்ந்து நின்றவனுக்கு வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை வெறும் கண்ணீர் மட்டும் கண்களில் தேங்கி நின்றது.மனம் ஊமையாக அழுதது.

மரியதாஸும் உள்ளே வந்ததும் நித்யா "மாமா நான் திருநெல்வேலிக்கு கிளம்புறேன்,எனக்கு இனி எந்த பந்தமும் வேண்டாம்,என் பட்டு மட்டும் போதும்,என்னை பஸ் ஏத்திவிடமுடியுமா?"

"சரிம்மா"என்றவர் தன் பேத்தியை தூக்கிக்கொள்ளவும்,ப்பா பிள்ளையை தூக்கிட்டு காருக்கு போங்க நான் என் பொண்டாட்டிய தூக்கிட்டு வர்றேன் நம்ம வீட்டுக்குப்போவோம் என்றவன்.

நித்யாவின் அருகில் வந்து அவளை அலேக்காக தனது இரு கைகளிலும் தூக்க,அவள் திமிற அவனோ இன்னும் இறுக்கிபிடித்தவன் மொத்த ஹாஸ்பிட்டலும் பார்க்க தூக்கி சென்று தங்களது காரில் இருக்க வைத்தான்.

பட்டுகுட்டியோ அதைப் பார்த்து "ஹய்யா ப்பா சூப்பது,ம்மா தூக்கி"என அரைகுறை மழலை வார்த்தை பேச அந்த இடமே சந்தோஷ பூக்களை தூவியது போன்ற உணர்வு அனைவருக்கும்.

அத்தியாயம்-23

தேவா அவளது அருகில் அமர்ந்தவன் அவளது தோள் மீது கையைப் போட்டு அமரவும்,அவளோ அவனிடமிருந்து நகர்ந்து சென்று ஜன்னலோரத்தில் இருந்தவள் அந்த கடல்காற்று தன் முகத்தில் மோதியடிக்கவும் அந்த குளிர்ந்த காற்றில் மனமும் குளிர்ந்தது போல உணர்ந்தாள் நித்யா.

கார் வீட்டை வந்து அடையவும் எல்லாரும் இறங்க: மெதுவாக நித்யா இறங்கப்போக மறுபடியும் அவளை தூக்கி கொண்டான் தேவா,ரீனா அவனைப் பார்த்து இப்பதான் சான்ஸ்னு அடிக்கடி தூக்குற நடத்து நடத்து என்க.

வீட்டுக்குள்ள வரமாட்டேனு என்று மறுபடி அடம் பிடிச்சா என்ன செய்றது அதுக்காக தான் முதல்ல ஐடியாவோட தூக்கிட்டேன் என்று தன் தங்கைக்கு பதில் கொடுக்க.

அதைப்பார்த்த நித்யா அவனிடமிருந்து திமிறி இறங்கி

வீட்டிற்குள் நுழையவும் அனைவரும் அவளைதான் பார்த்திருந்தனர்.

அவளோ எதுவும் பேசாது தங்களது அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.பின்னாடியே வந்த தேவா மெல்ல அவளருகில் கட்டிலில் அமரவும் வெடுக்கென்று எழுந்து அமர்ந்து அவனைத்தான் தீர்க்கமாக பார்த்தாள்.

பின் "இப்போ மட்டும் என்ன திடீர்னு பாசம் பொங்குது,ஏன் மாமா எல்லாம் சொன்னதுக்கு அப்புறமாதான் இந்த அன்பும் காதலும் பொங்குதோ;காலையில வரைக்கும் நான் உடம்புக்கு அலைஞ்சவ இப்போ அப்படி இல்லையா.நினைச்சு நினைச்சு எண்ணங்களை மாத்திப்பீங்களோ என்றவள் திரும்பி படுத்துக் கொண்டாள்.

அவள் பட்ட வேதனை அவளை பேசச்சொல்லுது பேசட்டும் எவ்வளவு வேணாலும் பேசட்டும்; மனசுல இருக்குது எல்லா ஆதங்கங்களும் வெளியே வரட்டும் என்று அமைதியாக அமர்ந்திருந்தான்.

மறுபடியும் திரும்பியவள் எழுந்து அமர்ந்து

"நீங்க சொன்ன உடனே நானா உங்ககூட வாழ வந்திடணுமா. நான் மறுபடியும் திருநெல்வேலிக்கு போறேன் பாப்பா கூட்டிட்டு போறேன்.யாரும் எங்களைத் தேடி வரவேண்டாம்.இந்த மூணு வருஷம் யாருமில்லாமதான இருந்தோம்,அப்படியே இனியும் பட்டுகுட்டியும் நானும் இருந்துப்போம்"

தேவா இப்பொழுது அவளது கண்களை தீர்க்கமாக பார்க்க மெல்ல தலையை திருப்பியவள் மறுபடியும் படுத்துக்கொள்ள.

தேவாவிற்கு அவனது தப்பு பெருசாக விஸ்வரூபமெடுத்தது,அவனுக்குத் தெரியும் மறுபடியும் எழும்புவாள் எதாவது என்னைக் காயப்படுத்தவாவது சொல்லுவாள் என்று.

அவன் நினைத்து முடிக்கவில்லை மறுபடியும் எழும்பியவள்"உடம்புக்கு அலையறவளா இருந்தா ஏன் கும்பகோணத்துல இருந்து இங்க வர்றேன் அங்கயே எவனையாவது தேடியிருக்க மாட்டேனா,இந்த மூணு வருஷமும் நானும் பாப்பாவும் தனியாதான் இருந்தோம் அப்போ யாரையும் தேடியிருக்க முடியாதா?ம்ம்.

இனி அப்படித்தான் பண்ணனும்; எனக்கு மனசுக்கு பிடிச்ச யாரையாவது பார்த்து இரண்டாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருப்பேன் என்றதும்.

தேவா"ஓஓஓஓ அப்படியா,வா இரண்டாவது ஒருதடவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டு செகண்ட் இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கலாம்"

அதைக்கேட்ட நித்யாவோ"ஹாஆன் என்ன" என்று முழிக்க.

தேவா"அதுதான் நீ சொன்னியே மனசுக்கு பிடிச்சவனை இரண்டாவது கட்டிக்கப்போறேனு; இந்த ஜென்மத்துல உன் மனசுக்கு பிடிச்சவன் நான் மட்டும்தான்,வா மறுபடியும் இன்னும் அதிகமா நேசிச்சு;இன்னும் அதிகமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம் மறுபடியும் என்றவன் அவளது கன்னத்தைப் பிடிக்க...அவனது கையை தட்டிவிட்டவள்,மறுபடியும் படுக்கப்போக.

ஒரு கையால் அவளை இழுத்து தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டவன்: படுத்து படுத்து எழும்ப உனக்கு கஷ்டமா இருக்கும்,எதுவா இருந்தாலும் இங்கிருந்தே சொல்லு நான் கேட்டுக்குறேன்.

அவளது மனது பட்ட காயங்களுக்காக தன்னிடம் ஆறுதல் தேட விழைகிறது என்று அவனுக்குமே புரிந்தது.

அதனால்தான் சிறுபிள்ளைகள் தனக்கு அடிபட்டால், அதை தன் தாயிடம் நூறு முறைகாட்டி தாயின் கவனத்தை தன்பக்கமாக ஈர்த்து ஆறுதல் தேடிக்கொள்ளும். அதுபோலதான் நித்யாவின் அனுகுமுறையும் இவ்வாறு இருந்ததை புரிந்தவன்: அவள் என்ன பேசினாலும் கோபமோ எரிச்சலோ அடையாமல் அமைதியாக அவளது நடவடிக்கைகளை கிரகித்துக்கொண்டான்.

அவளோ உடனே அவனது நெஞ்சிலிருந்து விலகி படுத்துக்கொண்டாள்; உருண்டு உருண்டு எப்போது தூங்கினாள் என்றே தெரியாது.

மெல்ல அவள் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றதும் கீழவந்தவன்,பார்த்தது தனது மகள் அக்காளின் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்ததைத்தான்.

மெல்ல குனிந்து தனது மகளை தூக்கியவன் அப்படியே தனது மடியில் வைத்துக்கொள்ள,அவளோ அவனின் முகத்தைபார்த்து கண்கள் மின்ன சிரித்தாள்.

அவ்வளவுதான் மொத்தமாக உடைந்து போனான்: தேவா இவ்வளவு நேரம் தன் மனைவியிடம் காண்பித்த மனோதிடம் எல்லாம் சுக்குநூறாக உடைந்து போயிட்டு.

அப்படியே தன் பட்டுவை இறக்கிவிட்டவன் வெளியே சென்று தன் வண்டியை எடுத்துக்கொண்டு எப்போதும் அவன் ரசிக்கும் அந்த கடற்கரை மணலில் தன்னை மறந்து படுத்திருந்தவனின் மண்டைக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடியது அடுத்து என்ன செய்யலாம் என்று.

முக்கியமான சில முடிவுகளை எடுத்தவவன், அந்த குளிர்ந்த காற்றும் அந்த ஈர அலைகள் அவனத் கால்களை நனைத்து செல்லவதிலும் லயித்து அப்படியே கண் மூடி படுத்திருந்தான்.

அங்கோ சகாயம் வீட்டில்" ண்ணே அந்த தேவா பையன் ஊருக்கு வந்துருக்கான்,என் காலை இப்படி செய்தவன் காலையும் உடைக்கணும்,இல்லை இல்லை காலையே மொத்தமா எடுத்துடணும்"

சகாயம்"இருல அவங்க சித்தப்பனை யாரோ போட்ருக்கானுவ,அதுக்கே நம்மளைத்தான் போலீஸ் மோப்பம் பிடிச்சிட்டிருக்கான்,இப்போ கையெதுவும் வைக்க முடியாது.இரு ஒரு ஆறுமாசம் போகட்டும் அவன் கப்பலுக்கு போகலைனா இங்கதான கிடப்பான் பார்த்துக்கலாம்,நீ கொஞ்சம் பொறுமையா இரு" என்று அவனை சமாதானம் செய்திருந்தான்.

அதற்குள் தேவா பல திட்டங்களை தீட்டி செயல்படுத்த முடிவு செய்துவிட்டான்,அதற்கு முதல் ஆட்டை தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிடித்துவிட்டான்.

வேற யாருமில்லை பென்னியைதான் பிடித்து வைத்திருந்தான். தனது பெரிய போட்டில் பிடித்து கடலுக்குள் கொண்டு சென்றவன்" லே பென்னி எங்க சித்தப்பா மேல கைவைச்சது நீதான்னு வந்தன்னைக்கே கண்டுபிடிச்சுட்டேன்,என்னை என்ன லேசுபட்டவனு நினைச்சுட்டியா? நான் தேவாடா,எங்கவீட்டாளுங்க மேலே கைவைக்குறளவுக்கு நீ பெரியாளா என்ன.ம்ம்.அதுவும் பொட்டைப்பய மறைந்திருந்து அவரை வெட்டியிருக்க"

எதுக்கு செய்த என்று அவனருகில் சென்றவன் தனது வலதை கையின் காப்பினை இடதுகையால் மேலேற்றியவன் அவனது முகத்தில் குத்திய குத்தில் அவனது மூக்குடைந்து இரத்தம் வந்தது.

உண்மைய சொல்லலை இப்பவே கழுத்துல கல்லை கட்டி உள்ள இறக்கிடுவேன் வசதி எப்படி.

"உண்மைய சொல்லிடுறேன் ண்ணே என்று கதறியவன்" அது நான் வேறதொழில் பண்ண ஆரம்பிச்சம்ணே,அதுல கொஞ்சம் பிரச்சனை ஆகிட்டுது,அதனாலதான்" என்ற வார்த்தைகளை விக்கி விக்கி செல்லவும் மறுபடியும் தேவா அவனை அடித்தான்.

"என்ன? என்ன தொழிலில்? முதல்ல ஒழுங்கா சொல்லு வேற தொழில் எனக்கு நிறைய யோசிக்க தோணுது என்று தேவா கேட்கவும்"

பென்னியோ மெல்ல வார்த்தைகளை முழுங்கி கொண்டே மெதுவாக "அது நம்ம கடல் எல்லையில் இருந்து நிற்கிற கப்பலிலிருந்து கொண்டுவர டேக்ஸ் இல்லாம கொண்டு வர்ற பொருட்களை இந்த கைமாற்றி கொடுக்கணும்"

ஓஓ..டேக்ஸ் இல்லாத பொருள் மட்டுந்தான் நீ கைமாத்திக் கொடுக்குற,அத என்னை நம்ப சொல்ற என்று கேட்டவனிடம்.

ஆமா தேவாண்ணே என்பதற்குள் அவனது காலில் கயிற்றைக் கட்டி கடலில் தள்ளிவிட்டுவிட்டான். கயிற்றின் மறுமுனை போட்டில் கட்டப்பட்டிருந்தது.ஒரு ஐந்து நிமிடத்திற்கு மேல் அவனை அப்படியே போட்டிருந்தான் தண்ணீருக்குள்.

அதன் பின் தேவாவே"அவனை மேல தூக்குங்கலே உயிரோட இருக்காணா பார்ப்போம் என்றுதும்,கூட இருந்தவர்கள் அவனை தூக்கி எடுத்து மறுபடியும் போட்டில் போட அரை மயக்கத்தில் மூக்கில் தண்ணீர் ஏறி அதுவும் உப்புத் தண்ணியென்றதும் கண்களெல்லாம் கலங்கி சிவந்து பாதி உயிர் போய் வந்திருந்தது.

மெல்ல தேவாவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு என்னை விட்றுங்கண்ணே,தெரியாம செய்துட்டேன்,என்னை மன்னிச்சுடுங்க என்க.

தேவா" மூணு வருஷத்துக்கு முன்னாடி நீ என் வாழ்க்கையில விளையாடி இருந்திருக்காது கூட தெரியாதா கேனை பயலா இருந்துருக்கேன்.என் மனைவிய அவங்கப்பா அம்மாவுக்கு ஆக்சிடெண்ட் என்று பொய் சொல்லி கூட்டிட்டு போய் விட்டது நீ தானே. அன்னைக்கே உன்னை கண்டுபிடிச்சு போட்டு தள்ளி இருந்தால், இப்போ என் சித்தப்பாக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது அவனை நாலு மிதி மிதிச்சு எட்டி தள்ளியவன் அவன் முன்பாக அமர்ந்தான்.

ராபின் சொன்னதுனால செய்தேன் என்னை மன்னிச்சுடுங்க விட்ருங்க,இனி நீங்க இருக்க பக்கமே வரமாட்டேன்,நான் எங்கயாவது போய் பொழைச்சுக்குறேன் என்று கையெடுத்து கும்பிடவும்.

தேவா சிறிது யோசித்தவன் சரி நீ கெஞ்சு கேட்கறதுனால உன்னைவிட்றேன் ஆனா எனக்கு ஒரு உதவி பண்ணனும்,அதுலமட்டும் சொதப்புனா,உன் கண்ட இடத்துல வெட்டிப்போட்டிருவேன் சரியா என்று தன் மீசையை இடதுகையால் முறுக்கியவன்.

அவனிடம் சிலபல விஷயங்கள் கேட்டுக் கொண்டான் அவன் என்ன செய்யவேண்டுமென்று சொன்னான்.மெல்ல கரைக்கு திரும்பினான்.

பென்னியின் குடுமி இப்போது தேவாவின் கையில்.

வீட்டிற்கு வந்தவன் தனதறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்து பார்த்தவன் தன் மனைவியைத் தேட:அவள் அறையிலில்லை என்றதும் கீழே வந்து தேட காணவில்லை,பதறி தேடியவன் ரீனா "நித்யாவும் பாப்பாவையும் காணலையே" என்று பதட்டத்துடன் கேட்க.

ரீனா"ண்ணே பதறாதா உன் மவ படுத்துற பாடுதாங்கமல் மேல மாடியில இருக்கா"

அவள் சொல்லி முடிப்பதற்கு முன்பாக அவன் பிதி படி மேலே சென்று விட்டான்.அங்கு சென்று இருவரையும் பார்த்ததும்தான் ஆசுவாசப்பட்டவன் அவர்களின் அருகில் வந்தான்.

மகளை தன் கையில் வாங்கப் பார்க்க,அவ்வளவுதான் பட்டுகுட்டி அவனிடம் வரமாட்டேன் என்று தலையாட்டியவள் நித்யாவின் தோளில் படுத்துக்கொண்டாள்,நித்யவிற்கு கைவலி வேறு ,தனது மகளை சமாளிக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள்.

சாப்பிட்டியா என்று நித்யாவிடம் கேட்க அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றதும்,சிறிது நேரம் நின்று தனது மகளின் தலையை வருடிவிட்டவன், கீழப்போய் ம்மா இரண்டுபேரும் சாப்பிட்டாங்களா என்று கேட்கவும்…

நீ வேற தம்பி நித்யா வந்தவுடனே இங்கயிருந்த மீன் எல்லாம் ஒதுக்கி எடுத்து சுத்தப்டுத்திட்டோம் பார்த்தல் பட்டுகுட்டி மீன் கேட்டு ஒரே அழுகை...மீன் வேணும்னு ஒரே அழுகை.

தேவா "என்னது பட்டுகுட்டி மீன் வேணும்னு அடம்பிடிச்சாளா,ம்மா வளர்க்கற மீனு கேட்டிருப்பா"

ஆமா ஆமா உன் மவளுக்கு மட்டுந்தான் விவரம் பாரு,எங்களுக்குலாம் விவரமில்லையோ என்று ரீனா கேட்டவள்...அப்பா ஹோட்டல்ல மீன் வாங்கறதுக்குத்தான் போயிருக்காங்க,உன் மவளுக்குக்காக.

உன் பொண்டாட்டி "என் பிள்ளை அவங்கப்பா மாதிரியே இருக்கணும்னு மீன் சாப்பிட பழகி வச்சுருக்கா,என்ன செய்றசு அவளும் மரியதாஸ் வீட்டு வாரிசாகவே குணத்துலயும் இருக்கா,உன்னைய அப்பா சமாளிச்ச மாதிரி உன் மவளையும் நீ சாமாளி என்றதும்.

தேவாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை,அதற்குள் மரியதாஸ் பேத்திக்காக ஹோட்டலில் மீன் வாங்கி வந்தவர்,நித்யாவை அழைக்க மகளை தூக்கிக்கொண்டு வந்தவள் டைனிங் டேபிளில் இருக்க வைக்கவும்.

மரியதாஸ் பட்டுகுட்டிக்கு மீனை பிய்த்து அவளது வாயில் வைக்கவும்,ரீனா ஓடிவந்து ப்பா பேத்தி வந்ததும் ரீனா குட்டிய மறந்துட்டீங்க என்றதும்" அவளுக்கு ஊட்டி விட்டவர்,பட்டுகுட்டி கையில் கொஞ்சம் கொடுத்து உங்கப்பாக்கு கொடுடா குட்டி என்றதும்." ப்பா இந்தா" என்று அவன் வாயில் கொடுக்கவும்...மீன் தேனைவிட அதிக ருசியாக இருந்தது அவனுக்கு,அது அன்பின் ருசி.

மெல்ல அங்கு நின்றிருந்த நித்யாவைப் பார்க்க அவள் படபடவென்று தங்களதறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.

ம்மா அவளுக்கும் எனக்கும் சாப்பாடு தாங்க என்றவன்,வெளியிலிருந்து வாங்கி வந்த இட்லியைகொடுக்க,அதைப் பார்த்தவன்,ஸ்பூன் தாங்க என்று வாங்கிக்கொண்டு மேலே சென்றவன்.

லட்டுகுட்டி வா சாப்பிடலாம் என்றதும் திரும்பி பார்த்தவள் "நான் யாருக்கும் லட்டுகுட்டியில்லை" என் முறைக்க.

சரி நீ வேற யாருக்கும் லட்டுகுட்டி இல்லை.நீ எனக்கு மட்டும் லட்டுகுட்டி சரியா என்றதும் அதுக்கும் ஸ் அவள் முறைக்க…

ஸ்பூனில் சாப்பாட்டை எடுத்து அவளுக்கு ஊட்ட,அவளோ வாயைத்திறக்காமலிருந்தாள்.

உடனே சாப்பாட்டை கீழே வைத்தவன் நீ சாப்பிடலைனா நானும் சாப்பிடமாட்டேன் என்று முறுக்கிகொள்ள.

ஏன் நான்தான் மூணு வருஷமா உங்களுக்காக பிள்ளையோட காத்திருந்தேன், நீங்க யாருக்காகக் காத்திருந்தீங்க; போனவ போய்ட்டா எவன் கூடயாவது சந்தோஷமாக வாழுவா; நம்ம நல்லா இருப்போம் அப்படின்னு வேலைக்கு போய் சாப்பிடதான செய்தீங்க ஏதோ எனக்காக சாப்பிடாமல் பட்டினியா இருந்த மாதிரியே பில்டப் என்றவள் படுத்துவிட்டாள்.

அப்படியே சாப்பாட்டை அங்கிருந்த டேபிளில் மூடிவைக்கவும்,ரீனா பட்டுவை தூக்கிக்கொண்டு வந்தவள் தூக்கத்திற்கு கண்ணை கசக்குதா அதான் கொண்டு வந்தேன் என்று நித்யாவிடம் அவளை கொடுத்தவள்.

தன் அண்ணனிடம் சைகை செய்து மலையிறக்கிட்டியா என்று கேட்க...அவனோ இல்லையென்று தன் உதட்டை பிதுக்கி தோள் குலுக்க.

என்னவோ செய்ங்கப்பா நான் என்னோக ஆளுகிட்ட பேசப்போறேன் இன்னைக்கு ஆன்லைன்ல வருவாங்க என்றவளிடம் அவனை என்கிட்டயும் கொஞ்சம் பேசசொல்லு என்று தேவா சொல்ல.

டைம் இருந்தா சொல்றேன் என்றவளை அடிங்க என்று விரட்டியவன் கதவை சாத்திவிட்டு வந்து மனைவி பிள்ளையின் அருகில் படுத்துக் கொண்டான்.

தேவாவிற்கு தெரியவில்லை அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று,நித்யா வநாத பிறகும் அவளை தனது வார்த்தைகளால் குத்தி கிழித்திருக்க,இப்போ எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அத்தியாயம்-24

தனதறைக்குள் சென்ற ரீனா சந்தோஷமாக வசந்துக்கு இன்று தானாக வீடியோ அழைப்பிற்கு போக,அதை எடுத்தவன்.

என்ன நெத்திலி முகம் பளபளன்னு இருக்கு,அதுவும் நெத்திலி ரொம்ப துள்ளுதே என்னவாயிருக்கும் என்று எண்ணியவன்.சொல்லுங்க நீங்களே எனக்கு கால் பண்ணிருக்கீங்க என்ன விஷயம்,முகத்தில் பல்பு வேற பிரகாசமா எரியுது என்று கேட்கவும்.

"எங்கண்ணே ஊருக்கு வந்தாச்சே என்க

"இதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டமா; அதான் எனக்கு தெரியுமே அவன் சொல்லிட்டுதானே வந்தான்"

"முழுசா கேட்காம கூட கூட பேசினீங்னா போனை வச்சுருவேன்"

" என் வாட்ஸ்அப்ல ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் போன் பண்ணி இருக்க, பேசுமா தாயே நீ பேசு நான் கேட்கமட்டும் செய்யறேன் என்றவனிடம் நித்யா விசயமும் பிள்ளை விசயமும் சொல்லி முடிக்கவும்.

அதைக்கேட்டு முடித்தவன் "அட கிராதகா தேவா நீ நல்லா ஸ்ட்ராங்கா பவுண்டேஷன் போட்டுட்டு தான் இங்க வேலைக்கு வந்திருக்க,இரண்டரை வயசுல பொண்ணு இருக்கு,இவனை நம்பி நம்ம கல்யாணத்தையே நிறுத்திட்டியேடி நெத்திலி,நியாயமாடி,அட்லீஸ்ட் கல்யாணம் பண்ணிருந்தா பவுண்டேஷனையாவது ஸ்ட்ராங்கா நானும் போட்டிருப்பனேடி...வந்தேன் அண்ண தங்கச்சு இரண்டு பேரையும் ஓடவிட்டு அடிப்பேன்டி"

"என்ன ரொம்ப பேசுறீங்க,எங்கண்ணனே பாவம் தெரியுமா?"

"யாரு உங்கண்ணே!பாவம்! இதை வெளிய சொல்லாதடி ஒரு பையலும் நம்பமாட்டான்,மொத்தத்தில் நான் தாண்டி பாவம்,காய்ஞ்சு போய் நடுக்கடலுக்குள்ள கிடக்கேன்"என்று பெருமூச்சொன்றைவிடவும்.

ரீனா ச்ச்...ச்ச்,,ச்ச் என்று போனிலயே முத்தம் கொடுக்க.

அடியே எனக்கு இச்சு இச்சு இச்சு என்று கேட்குதுடி,முத்தம் எதுவும் கொடுத்த? என்று வசந்த கேட்டது.

ச்சீ என்று தன் கண்ணை மூடி வெட்கப்பட…

"அடியேய் நான் வர்றதுக்கு இன்னும் ஒருமாசமிருக்குடி, கடலுக்கு நடுவுல உப்பு தண்ணிக்குள்ள மிதந்திட்டிருக்கேன் இப்போதான் உனக்கு லவ் மூடு வருதா,கய்ஞ்சுப்போய் கிடக்கேன் உசுப்பிவிட்டு கடுப்பேத்தாத நெத்திலி என்றவன், ஹப்பாடா எப்படியோ இப்போவாவது என் நெத்திலிக்கு லவ் ஹார்மோன் வேலை செய்தே அதுவரைக்கும் சந்தோஷம்"

"ஐய"

"என்ன ஐய அங்க உங்கண்ணே எனக்கு சீனியராயிட்டான் வாழ்க்கை படகுல ஏறி.நான் இன்னும் அந்த படகுல ஒத்தை காலை வச்ச மேனிக்கே நிக்குறேன் என்னத்த சொல்ல"

"உங்களை அண்ணே கால் பண்ண சொன்னான்: எதோ பேசணுமாம்"என்றவள் கொஞ்சிப் பேசி கிறங்கி,அவனை கிறங்கடித்து ஒரு வழியாக போனை வைத்தாள்.

பின் வசந்த் தேவாவிற்கை அழைக்க இருவரும் முக்கியமான சில விஷயங்களை பேசிவிட்டு வைத்தவன்.

நித்யாவின் அருகில் நெருங்கிப்படுத்து; அவளது இடுப்பினூடே கரங்களை நுழைத்து; அவளது மேனியின் வாசம்பிடித்து அப்படியே அமைதியாக படுத்திருந்தான்.

அவனுக்குத் தெரியும் அவள் முழித்து தான் இருக்கிறாள் என்று. அவனது கை அவளது இடுப்பில் போடவும் வயிற்றை மெதுவாக இயக்கிய அசைந்து கொடுத்தாள்:அதனை கண்டு கொண்டவன், அவள் இன்னும் தூங்கவில்லை என்று ஆனாலும் அவளை தொந்தரவு செய்யாது அப்படியே அமைதியாக படுத்திருந்தான்.

இருவரும் தங்களது உணர்வுகளை பிரதிபலிக்காது மனக்காயங்கள் ஆற வேண்டுமென்ற உணர்வில் இருவரும் மற்றவரின் அருகாமையில் நெடுநாளைக்கு பின் நிம்மதியாக தூங்கியிருந்தான்.

காலையில் கண் விழித்ததும் பார்த்தது மனையாள் அவனது நெஞ்சில் தலை வைத்து படுத்து இருந்தாள்,கொஞ்ச அதை ரசித்து அமைதியாக கண்மூடி சுகித்திருந்தான்.

துறைமுகம் போக நேரமாகவும் மெல்ல அவளது தலையை தலையணையில் வைக்கவும்:நித்யா முழித்தவள் தன் கணவனையே கண்ணெடுக்காது பார்த்துக்கொண்டிருக்க;தேவாவும் அந்த கண்களில் மீண்டுமாக தொலைந்து போக விருப்பப்பட்டு அவளையே பார்த்திருந்தான்.

அதற்குள் கீழே சத்தம் கேட்கவும் எழுந்து புறப்பட்டு வர,நித்யாவும் கீழே வந்தாள்,மாமானாரும் அங்கிருக்க எப்போதும் போல காபி போட்டுக் கொடுக்கவும் தேவா அதை ரசித்து குடித்துக்கொண்டே மனையாளைப் பார்க்க அவளோ தன் கை நகங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தாள்.

மரியதாஸ் காபி குடித்து முடித்து அப்படியே வெளியே செல்ல காபி குடித்துக் கொண்டிருந்தேன் கப்போடு அவளருகில் நெருங்கி வந்தவன்; சட்டென்று நித்யாவின் முகத்தை தன் ஒற்றை கரத்தால் நிமிர்த்தி பிடித்து அவளது வாயோடு வாய் வைத்து தன் வாயின் காபியை அவள் வாய்க்கு கடத்தியிருந்தான்.

நித்யா அதிர்ந்து விழித்து அவனைப் பார்க்க அவனோ தன் கண்மூடி ருசித்திருந்தான்.பின் மெல்ல விடுவித்தவன் காபிக்கும்,அப்புறம் தன் உதட்டு குவித்து காண்பித்து இந்த காபிக்கும் தேங்க்ஸ லட்டு பேபி"என்றவன் இனி நின்றால் அடிச்சாலும் அடிச்சுடுவாளோனு ஓடிவிட்டான்.

அவன் சென்றதும் தன் இதழை தடவிக் கொண்டவளின் இதழோரம் புன்னகை எட்டிப்பார்த்தது.இன்னும் கையின் காயம் ஆறவில்லை என்றாலும் வலி பரவாயில்லை,மெல்ல தனது மகளின் அருகில் படுத்தவள் அவளது தலையை கோதிவிட்டு படுத்துவிட்டாள்.

மைக்கேல்தான் காரை ஓட்டினான் மரியதாஸின் குடும்ப விசுவாசி இப்பவும் எப்பவும்,நேற்று வேறு அதே கையினால் பென்னியை அடித்ததினால் அவனது காயம் இன்னும் ஆறவில்லை இரத்தம் கசிவு இருக்கத்தான் செய்தது.இவன் செய்தது ஒன்னும் மரியதாஸிற்கு தெரியாது.

காலையில் துறைமுகம் சென்று தங்கள் தங்கள் வேலையிலிருக்க பென்னியின் அப்பா வந்து " தாஸண்ணே என் பையன யாரோ தூக்கிட்டுப் போய் நல்ல அடிச்சு சதைச்சு கொண்டு கரையில போட்டிருக்காங்க,நம்ம பையன்களையே இப்படி பண்றாங்கனா; சும்மா விடக்கூடாது ண்ணே.அவனை ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கேன்.

மரியதாஸ் திரும்பி தன் மகனைப் பார்க்க அவனோ அவரைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்ப்பதுபோல திரும்பிக்கொண்டான்.அவருக்கு புரிந்துவிட்டது இது நம்ம பைய வேலைதான்.நல்ல பார்ம்க்கு வந்துட்டான் போல பொண்டாட்டி பிள்ளை வந்தவுடனே என நினைத்தவர்.

பென்னியின் அப்பாவை நோக்கி" உன் மவனுக்கு எதிரி யாரா இருப்பா ;அவன் பண்ற தொழில்ல உள்ளவனாதான் இருக்கணும்,நம்ம இந்த கடல்தாயை நம்பியிருக்கோம் அவதான் நம்மள வாரிகோரிதந்து வாழவக்குறா.அதுக்குமேலயும் ஆசைப்பட்டு கள்ளத்தொழில் செய்தா அந்த பனிமயமாதா பார்த்துப்பாங்க.இனியாவது உன் பையனை ஒழுங்கா இருக்க சொல்லு" என்று அனுப்பி வைத்தார்.

அதுவரையிலும் இங்கு ஒரு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தும் அறியாதது போல நின்றிருந்த தேவாவின் தோளை தட்டி: மறுபடியும் வேலை ஆரம்பிச்சிட்டா அப்படித்தானே.

"என்னப்பா கேட்கறீங்க,நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியலைப்பா" என்றவன் தன் வேட்டியின் ஒரு நுனியைப் பிடித்து அப்படியே கெத்தாக நடந்து போனவனை கண்டு மரியதாஸே அசந்து ரசித்து நின்றார்.

அடுத்த மரியதாஸ் இந்த துறைமுகத்துக்கு தயாராகிட்டான் என்றதொரு எண்ணம் வந்தாலும் பயமும் வந்தது.இருவரும் அப்படியே போய் மருத்துவமனையில் அருளைப் பார்க்க போனார்கள்.

அங்கு அருள் ஓரளவு தேறியிருந்தார்,கண்விழித்து பேசவெல்லாம் செய்தார்,சாப்பிடவும் ஆரம்பித்துவிட்டார்.

தேவாவைக் கண்டதும் அவனது கையை பிடித்து வைத்துக் கொண்டவர்" ரொம்ப சந்தோஷம் தேவா மருமகளையும் பேத்தியும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது, எங்க உன்ன பாக்காமலே போய் சேர்ந்திடுவேன் உனக்கு கடைசி நிமிஷம் வரைக்கும் நினைத்துதான் கண்ணை மூடினேன்" என்றவருக்கு கண்ணீர் முட்டி நின்றது.

எனக்கு எதுவும் ஆகிட்டுனா நீயே உங்க சித்தியை பார்த்துப்ப அப்படிங்கற நம்பிக்கை இருந்தது தேவா என்றவரிடம்,அகதா" என்ன பேசுறீங்க பிள்ளைகிட்ட அவனுக்கு சங்கடமா இருக்கப்போகுது"

மரியதாஸ்"ஆமா இப்பவும் உன் பிள்ளை சின்ன பாப்பா பாரு, இன்னும் பால்குடி மறக்காத பாப்பா, உன்னை சேர்த்திருக்க இதே ஆஸ்பத்திரியில் தான் அந்த பையன் பென்னியவும் சேர்த்து இருக்கு, உன் மவன் என்ன பண்ணி வச்சிருக்கானு அவன்கிட்டேயே கேளு"

அருளின் கண்கள் விரிந்து அப்படியாலே தம்பி என்று தேவாவிடம் கேட்க,அவனோ லேசாக சிரித்து மரியதாஸிற்கு தெரியாமல் கண்ணடிக்க, சித்தப்பாவும் மகனும் இப்பொழுது சேர்ந்து சிரித்தனர்.

அதற்குள் பென்னி விஷயம் ராபினுக்கு தெரிய வரவும் பென்னிய தூக்கினவனுக்கு நம்மள தூக்க எவ்வளவு நேரம் ஆகும்;அவனை அதுக்கு முன்னாடி ஏதாவது செய்யணுமே என்று தனது அண்ணனிடம் கூட எதுவும் சொல்லாமல் தேவாவை போட்டுத்தள்ள பணம் கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டான்.

இரண்டு நாட்கள் அவர்களது வாழ்க்கையில் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் அமைதியாகவே கழிந்தது. மூன்றாம் நாள் அவனது கை காயங்கள் எல்லாம் ஓரளவு ஆறியதும் தனது என்ஃபீல்டு வண்டியை எடுத்துக்கொண்டு, மாலை வேளையில் துறைமுகத்திற்கு சென்றுகொண்டிருக்க, அவனைத் தொடர்ந்து ஒரு குவாலிஸ் வண்டி வரவும் சற்று சுதாரித்தவன்,

ரோட்டிலிருந்து சிறிது மண் ரோட்டில் வண்டியை இறக்க எத்தனிக்கவும்,அந்த குவாலிஸ் வண்டியிலிருந்து ஒருத்தன் பெரிய வால் கத்தியை வீசவும் சரியாக இருக்க,அது தேவாவின் தோள்பட்டையின் கீழ் புஜத்தில் லேசாக பட்டிருந்தது.லேசாக இரத்தம் கசிந்தது.

தேவாவை கொல்லுவதற்கு வைத்த குறி மெல்ல குனிந்து கீழிருந்த அந்த கத்தியை எடுத்து பத்திரப்படுத்தியவன்: ஹாஸ்பிட்டலில் போய் பார்த்துவிட்டு காயம் ஆழமில்லை என்றதும், வீடு வந்தவனைப் பார்த்து அத்தனைபேரும் பதறி ஓடிவந்து அவனைப் பிடித்து அழவும்:என்னவோ ஏதோவென்று ஓடிவந்த நித்யா அவனது சட்டையெல்லாம் இரத்தத்தைப் பார்த்ததும் அவனருகில் வந்துநின்று படபடவென சட்டையை கழட்டியவள் காயத்தைதான் பார்த்தாள்" ஐயோ ஒண்ணுமில்லம்மா சைடுல வந்த வண்டிக்காரன் இடிச்சிட்டான்,அதுல கம்பி கீச்சுட்டும்மா என்று சமாதானப்படுத்தினான்.

ஆனால் நித்யாவிற்கு அது பொய்யென்று தெரிந்தது அவனது கண்ணே அதைக் காட்டிக் கொடுத்தது.பெண்களை சமாதனப்படுத்தி அனுப்பியவன் தான் தந்தையிடம் கண்காட்ட வெளியே வந்தார்,மெல்ல மைக்கேலை வரவழைத்து அவனிடம் அந்த கத்தியை கொடுத்து நம்ம பையலுவகிட்ட விசாரிங்க,இது நம்மா ஊரு சைடு கத்தி மாதிரியில்லை,வெளியூரு மாதிரி இருக்கு,எனக்கு நித்யா அப்பா மேல இன்னும் சந்தேகமா இருக்கு என்றவன் தன் தகப்பனை பார்க்க.

அந்தாளையும் நம்ப முடியாது; நித்யாவையே கொல்லப்பாத்தவன்தான என்றார்.

தேவா "ராபினா இருந்தா நான் பார்த்துப்பேன்பா; ஆனா நித்யாவோட அப்பாவா இருந்தா உங்க கூட்டாளிங்கதான் எனக்கு தேவைப்படும் என்றவன்.

விசாரிக்க ஆரம்பித்தான் அதில் ராபினோடு சேர்ந்துதான் அவன் சந்தேகப்பட்ட மாதிரியே நித்யாவின் அப்பா சிவசுவும் தேவாவை கொல்ல கூட்டனிப் போட்டிருந்தார்.

மூணுவருசம் கழித்து பொண்ணு பிள்ளைகுடும்பம் என்ற சந்தோஷமாக இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை போல என்று வருத்தப்பட்டவன்.

இப்படிப்பட்ட ஆளு நாளைக்கு நித்யாவையும் பிள்ளையும் கொல்வதற்கு ஏற்பாடு பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம் என ரொம்ப யோசித்து ஏற்கனவே பெற்னிக்கு போட்ட ஸ்கெட்ச்சு சரியாக நடத்தினான்.

அடுத்த நாள் தூத்துக்குடியே பரப்பரப்பாகத்தான் எழும்பியது.

பிரபல தொழிலதிபரும் அரசியல் பிரமுகமான சகாயம் அவர்களின் தம்பி ராபின் என்கவுண்டரில் சுட்டுகொல்லபப்ட்டார் என்பதுதான் தலைப்பு செய்தியாக வந்தது.

அருளை மருத்துவமனையிலிருந்து தங்களது வீட்டிற்கே அழைத்து வந்திருந்தனர்,இப்போது அண்ணனும் தம்பியும் செய்திக் கேட்டு தேவாவை பார்க்க…

சித்தப்பா போலீஸ் என்கவுண்டருக்கும் எனக்கும் என்னப்பா சம்பந்தம் என்றவனை மரியதாஸ் முறைத்து: நீ எதாவது செய்திருப்பலே நீ யாரு எனக்கே அப்பன்ல; அருளோ அப்படியா என்று தலையசைக்க சும்மா என்று கண்ணடித்து எழும்பி வந்துவிட்டான்.

நித்யாதான் சரியாக கணித்து கேட்டாள்: உங்களை கொல்ல வந்தது எங்கப்பாதான என்று கேட்க:அவன் இதற்கு மேலும் அவளிடம் மறைக்காது எல்லா விஷயத்தையும் செல்லவும் அவனது நெஞ்சில் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.மறுபடியும் ஒரு பிரிவை தாங்கும் சக்தி இருவருக்குமே இல்லை.

பென்னியின் மூலமக அவன் கடத்தி வந்த போதைப் பொருட்களை ராபினின் காரில்; பென்னியின் ஆட்களை விட்டு பதுக்கி வைக்க சொல்லியிருந்தான்.

அதுதான் அன்று போட்டில் வைத்து அவனிடம் பேசிய டீல்.

அவனோ அதையறியாது இரவில் பாரில் குடித்துவிட்டு வர, வாகன சோதனையில் மாட்டியவன், பயந்து போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு ஓட முயற்சி செய்ய துப்பாக்கியை பயன்படுத்தினர்,அது அவனது உயிரையே காவு வாங்கிவிட்டது.

அத்தியாயம்-25

கும்பகோணத்தில் சிவசுவின் வீட்டில் ஜானகி அழுது கொண்டிருந்தார்.

உங்காளால்தான் மூணு பிள்ளைங்களோட வாழ்க்கையும் இப்படி ஆயிடுச்சு,நீங்க பொண்டாட்டி பிள்ளைங்களைத் தவிர அக்காங்க முக்கியமானவங்களா போயிட்டாங்க.அவங்க பிள்ளைங்க எல்லாம் நல்லா சந்தோஷமாகத்தான் இருக்காங்க.

நீங்கதான் சுய கௌரவம் குடும்பத்துக்காரங்க,என் சமுதாயம், என் ஜாதினு பிடிச்சுட்டு பொம்பளை பிள்ளைங்கள கூட ஒழுங்கா வளர்க்கலை, எங்க அதுங்களுக்கு பிடிச்சத கூட வாங்கி கொடுக்காமல் தான் வளர்த்தீங்க?சாப்பாட்டு மேஜையில் இருந்த சிவசு, ஜானகி கிச்சன்ல இருந்து அழுதுகொண்டே பேசிக்கொண்டிருக்கும் தட்டை விசிறி அடித்தவர் கிளம்பி தனது பேங்கிற்கு சென்றுவிட,ஜானகிதான் இந்த மனுஷனை நினைச்சா வேதனையா இருக்கு,குடும்பம் பிள்ளைகள்னு பாசமா இருந்திருந்தால்; பிள்ளைங்க நம்ம பேச்சை கேட்டு இருக்கும், இவரு தன் அக்காக்களின் பேச்சுக்கள் கேட்டுட்டு பொண்டாட்டி பிள்ளைகளை வருத்தினார்.இவர் எப்போ திருந்த போறாரோ?இந்த வயசுக்கப்புறம் திருந்தினர் நேற்று இருந்தா என்ன என்று நொந்து கொண்டார்.

சாய்நாத் வந்திருந்தான் தன் மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு. அதனால்தான் இப்பொழுது ஜானகி அழுது கொண்டிருக்கிறார்.

சாய்நாத்திற்கு திருமணம் முடிந்த அடுத்த மாதத்திலிருந்து தொடங்கிய பிரச்சினை இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

வர்ஷினியின் தாயார் தன் தம்பி சிவசுவை போல சாய்நாத்தையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைக்க நினைக்க,இளைய தலைமுறையினனான சாய்நாத்திற்கு தன் சுயம் தொலைவதுபோல இருக்கவும்; தன் மனைவி வர்ஷினியிடம் நேரடியாகவே சொல்லிவிட்டான்.

பெண்டாட்டி பேச்சு,மாமியார் பேச்செல்லாம் என்னால கேட்டு பூம்பூம் மாடுமாதிரி தலையாட்டிலாம் வாழமுடியாது நான் ஆண்பிள்ளைடி உங்கம்மாகிட்ட சொல்லிவை"என்று.

அப்போது பிடிச்சு தொடங்கிய பிரச்சனை வர்ஷினி தன் சுயத்தை காண்பிக்க ஆரம்பித்தாள்,அதைவிட சென்னை நகரத்தில் படித்த பெண்ணான வர்ஷினி;சுதந்திரமாக சிந்திக்க கூடிய பெண்ணாகவே வளர்க்கப்பட்டு இருந்ததும் சாய்நாத்திற்கு பிரச்சனை.

கணவன் மனைவி இருவரும் கருத்துக்களை பாகிர்ந்து வாழ்க்கையை வாழும் முறையை அவன் தன் வீட்டில் பார்க்கவில்லையே.தன் தகப்பன் "தன் அம்மா முதற்கொண்டு தன் தங்கை இருவரையும் பெண்கள் எனும் அடிமைகளாகவே தானே வளர்த்தார்.அதில் எங்கேயிருந்து அவனுக்கு பெண்களின் சுயசிந்தனை உணர்வுகள் புரியும்

அப்படியான ஆதிக்கமுறை அடக்குமுறை வாழ்க்கைக்கு பழக்கப்படாத வர்ஷினிக்கு சாய்நாத்தின் அந்தப் பிற்போக்கான எண்ணங்களும் நடைமுறைகளும் அவளுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுக்க அப்பொழுதே சண்டையிட ஆரம்பித்துவிட்டாள். அதில் வேறு இரண்டு வயதில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது.

இப்பொழுது கருத்து வேறுபாடு முற்றி வர்ஷினி விவகாரத்தை கேட்கின்றாள். இனி சாய்நாத்துடன் வாழ முடியாது என்று, அதுதான் இப்பொழுது பெரிய பிரச்சினையாக குடும்பத்தில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

சிவசுவோ மருமகள் வர்ஷினி தனது அக்காள் மகள் என்பதினால் மட்டுமே விட்டு வைத்திருக்கிறார், இல்லையென்றால் இதற்குள் ஒரு ஆட்டம் ஆடியிருப்பார்.

இளைய மகள் திவ்யாவின் வாழ்க்கையும் கேள்விக்குறிதான்: இப்பொழுது இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைக்கு செல்லமுடியாத நிலையில் இருக்கின்றாள்.

அவளை விரும்பி பெண்கேட்டு வந்த குடும்பத்தை வெளியே தள்ளிவிட்டார்.நித்யாவின் திருமண காரியங்களில் சிவசு நடந்துகொண்ட முறைகளிலேயே திவ்யாவிற்கு காதல் என்றாலே காத தூரம் ஓடும் அளவிற்கு வெறுத்துப் போனாள்.

அவள் ஓரளவு வளர்ந்த பின்பு நித்யாவிற்கு நடந்த கொடுமைகளை எண்ணி எண்ணி சிவசுவையும் வெறுக்க ஆரம்பித்தாள்.சொந்த பெண்ணையே கொலை செய்ய அஞ்சாதவர் நம்ம காதலிச்சா நமக்கும் அதேகதிதான் என்று நினைத்து தன் வீடு தேடிவந்து பெண் கேட்டவர்களிடம் சிவசுவிற்கு முன்னாடியே விருப்பமில்லையென்றுவிட்டாள்.

ஆக மொத்தம் மூன்று பிள்ளைகளுக்கும் அவர் நல்ல தகப்பனாக இல்லை; அதைவிட ஜானகிக்கு நல்ல கணவனாக இருக்ககூடிய தகுதியே அவருக்கு கிடையாது.

சாய்நாத் இப்போது என்ன செய்யவென்று தலையை பிய்த்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறான்.

அப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் தான் தேவா வந்ததும்,அதைவிட நித்யா குழந்தையோடு வந்திருப்பதையும் பார்த்த ராபின்தான் மெல்ல சிவசுவிற்கு அழைத்து" என்ன சார் என் பொண்ணு அந்த வீட்டுக்கு வந்திருக்காளா வந்திருக்காளானு மூணு வருஷமா கேட்டீங்க.உங்க பொண்ணு என்னடானா கையில் பிள்ளையோட வந்து நிக்குறா.இங்க வாழவே வந்துட்டா எப்படி உங்க மான மரியாதைய விட்டு இப்படி அனுப்பினீங்க.உங்க ஊருல இருந்துதான் வந்திருப்பாங்க போல.எப்படி விட்டீங்க" என்று நக்கலாக கேட்டான்.

அவனுக்கு சிவசுவின் மேல அக்கறை ஒன்னும் கிடையாது,தேவா வாழக்கூடாது;அதுவும் இவ்வளவு அழகான பொண்டாட்டி புள்ளையோட வாழறான் என்று பார்த்ததும் பொறாமையும்,துவேஷமும் வந்தது.அதை தீர்த்துக்கொள்ளவே சிவசுவை தூண்டிவிட்டான் தனது குத்தலான வார்த்தைகளால்,அது சிவசுவிடம் சரியாக வேலை செய்தது.

அது சுருக்கென்று சிவசுவின் மண்டைக்கு ஏறியதும்.உடனே என்ன செய்யலாம் என்று இரண்டு நாள் தூங்காமல் விழித்திருந்து யோசனை செய்தவர்.

நித்யாவும் தேவாவும் இருக்கற காலம் வரைக்கும் நமக்கு நித்யாவோட தகப்பன்ற முறையில் அவமானம்தான் மிஞ்சுமென்று கிறுக்குத்தனமாக யோசித்தார்.

ஜானகியிடம் வந்து" உன் மக இங்கயிருந்து தப்பி ஓடிப்போனதே போனாளே! எதாவது ஆத்துலயோ குளத்துலயே விழுந்து செத்திருக்ககூடாது சனியன் போய் பிள்ளைய பெத்துட்டு அந்த ரவுடிக்கூடவே வாழப்போயிட்டா,உயிரோடயெருந்து எனக்கு அவமானத்தை தேடிதர்றது பாரு என்று தலையிலடித்துக் கொண்டார்.

அதைக்கேட்ட ஜானகியின் பெத்தவ வயிற்றில் பால் வார்த்தது,இத்தனை நாளும் போனவ எங்கயிருக்காளோ? என்ன பண்றாளோனு? தினம் தினம் கலங்கி "பெருமாளே என் பொண்ணு எங்க இருந்தாலும் நல்லாயிருக்கணுமே,

அதைவிட உயிரோட இருக்கணுமே பெருமாளே என்று தினம் தினம் அவர் வேண்டிக்கொண்டதின் பலன் கிடைத்தது,அதுவே அவருக்கு சந்தோஷமென்றால்; அவ ஆத்துக்காரனோடு வாழறானு கேள்விப்பட்டு மனதிற்குள்ளாகவே வாழ்த்தினாள் நல்லயிருக்கட்டுமென்று

மறுநாள் தங்களது ஊரில் யாராவது ரவுடி தொழில் செய்றவங்களைத் தெரியுமா என்று சுற்றி இறங்கி யாருக்கும் தெரியாமல் விசாரிக்க,கடைசியில் சேலம் பகுதியிலிருந்து அடிமட்டத்திலிருந்து குறைவான பணத்தில் ஆட்களை போட்டுத்தள்ளும் கும்பலுடன் பேசி இரண்டு பேரை தூத்துக்குடிக்கு அனுப்பினார்.

அதை சகாயத்திற்கும் ராபினுக்கும் அழைத்து சொல்ல.சகாயம் கொஞ்சம் பம்மினான் வேண்டாம்லே மரியதாஸ் குடும்ப பாரம்பரியம் பத்தி தெரியாமலயே கை வைக்கப் பார்க்காத.சின்னதா அடிதடி வெட்டுக்குத்துனு செய்தோம்.நமக்கு போட்டுக்கள் இருக்குனு மரியதாஸ் சமுதாயத்தையே எதிர்த்தோம்னா அதுவேற.

இது கொலை அதுவும் தேவாவை கொலை செய்துட்டு இந்த ஊருல நம்ம நிம்மதியாக இருக்கமுடயாதுலே.ராபின் இந்த விஷப்பரீட்சை நமக்கு வேண்டாம் என்று சொல்லியும் அவன் அதை கேட்கவில்லை.

"தேவாவை மட்டும் போட்டு தள்ளிட்டா,இந்த ஊர்ல நம்ம கொஞ்சம் பெரியாளாயிடுவோம், மரியதாசுக்கு கிடைக்கக்கூடிய மரியாதை எல்லாம் நமக்கும் கிடைக்கும்தான" என்று ராபின் ஆசை வார்த்தைகளோடு பேசினான்.

அதற்குள் சகாயம் என்னலே கோட்டிக்காரன் மாதிரியே பேசுத.மரியதாஸிற்கு இருக்ககூடிய மதிப்பும் மரியாதையும் அவருக்கு அவரது சமுதாய மக்கள் கொடுக்கறது,

அவங்கப்பா நியாயமான தலைவராக இருந்து மீன்பிடி தொழில் செய்றவங்களுக்கு தலைவர் மட்டுமல்ல.

அவங்களுக்கு எல்லா விதத்திலயும் உதவியா இருந்து அவங்க வாழ்வாதாரத்திற்கு என்னென்ன செய்யணுமோ செய்து கொடுத்தார்,அதற்கு எதிர்த்து நிக்குறவங்களை எதிர்த்து நின்றார்.

அதனால்தான் மரியதாஸும் அப்படித்தான் நியாயம்னா அமைதியா ஏத்துக்கிட்டுப்போய்டுவார்.தப்பு அநியாயம்னு தெரிஞ்சா அவ்வளவுதான் ஓடவிட்டு வெட்டி கடல்ல தூக்கி போட்ருவாரு.சும்மா அவங்களை பத்தி தெரியாமல் எடுத்துசாடி செய்யாத.

"சிவசு நம்ம பகையை பயன்படுத்திக்கிறான் பார்த்துக்கோ,வேண்டாம் மரியதாஸுக்கு தெரிந்துச்சுனா உன்னை சுறாவுக்கு இறையாக்கிருவாரு பார்த்துக்கோ" என்ற சகாயம் எவ்வளவோ எச்சரிக்கை செய்தும் அதைக் கேளாமல் ராபின் தேவாவுக்கு ஸ்கெட்ச் போட்டான். ஆனால் விதி வலியது கடைசியில் அவன் தேவாவுக்கு கண்ணி வைத்தான்,அந்த கண்ணியை தேவா அவனுக்கே வேற மாதிரி திருப்பிவிட்டுவிட்டான்.

அடுத்த வலை தன் மாமனாருக்குத்தான் விரித்தான்.அவரது கையை வைத்தே அவரது கண்ணை குத்த ஏற்பாடு செய்தான்.

தேவா சிவசுவை பற்றி மரியதாஸிடம் சொன்னதுமே,அவர் தீர்மானித்து முடிவெடுத்துவிட்டார்.நம்ம பிள்ளை இனி சந்தோஷமாக வாழ வேண்டுமெனில் சிவசுவை எதாவது செய்ய வேண்டுமென்று.

மரியதாஸ் தன் பிள்ளைகளின் எதிர்காலம் கருதிதான் இந்த கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றிலிருந்து ஒதுங்கியிருக்கார்,இல்லையென்றால் தேவா எப்பவோ அதை தன் கையில எடுத்திருப்பான்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலே சாவு என்ற பழமொழியை மனதில் ஆழபதிந்ததினால் மட்டுமே இப்போது தன் மகனையும்,தம்பியையும் தன் கைக்கு கீழாக வைத்து அடிதடி,ரவுடிஸத்திலிருந்து விலக்கி தொழிலை கவனிக்க வைத்தார்.

மெல்ல தனது அறையில் மிகவும் தீவிர சிந்தனையில் இருந்தவரிடம் ரெஜினா வந்தார்"என்னங்க என்ன தீவிர யோசிச்சுட்டு இருக்கீங்க,மயினி வந்திருந்தாவ நம்ம வசந்த் ரீனா கல்யாணம் பற்றி பேசுவதற்கு,நீங்கதான் லேட்டா வந்தீங்க"

 

தேவா வேற திரும்பி வந்துட்டான்,அவனும் குடும்பம் பிள்ளைனு இருக்கான் சந்தோஷம்,நம்ம ரீனா குட்டி கல்யாணத்தை ரொம்ப நல்ல நடத்தனும்,ஆனாலும் ரீனா பிள்ளைக்கு அண்ணன் மேல பாசம் அதிகம்தான் பாருங்களேன்,அவன் வர்ற வரைக்கும் கல்யாணம் வேண்டாம்னு இருந்துட்டாளே,ரொம்ப சந்தோஷம் நம்ம காலத்துக்குப் பிறகு பிள்ளைங்க ஒற்றுமையா இருப்பாங்க என்று மனம் நிறைந்து பேசிக்கொண்டிருக்க.

மரியதாஸ் அமைதியாக இருக்கவும் ரெஜினா அவரது தோளை தட்டி "என்ன நான்பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீங்க என்ன பதிலே சொல்லாமல் இருக்கிய என்ன விஷயம்" என்று கேட்க.

அவரோ என்ன பேசின? என்று கேட்கவும்,ரெஜினா புரிந்து கொண்டார் "அவரது மனதின் சிந்தனை இங்கில்லை என்று உடனே அவரது அருகில் அமர்ந்து"மச்சானுக்கு என்ன இப்போ மண்டையில ஓடுது,என்று அவரது காலை தன் மடியில் தூக்கிவைத்து பிடித்துக்கொண்டே பேசவும்,லேசாக சிரித்தவர்…

நாடிபிடிச்சு வச்சிருக்க என்கிட்டயிருந்து எப்படி விசயத்தை கறக்கலாம்னு என்று சிரித்தவர் தேவாவின் விஷயத்தை சொன்னார், அவரது மாமனார் விசயத்தில் ஒரு முடிவெடுக்க நேரம் வந்திட்டு,அதுதான் யோசனைமா என்றவரிடம்.

"என்ன மச்சான் இதுக்கு முன்னாடிலாம் இப்படியா யோசிச்சீங்க,தேவா மாதிரியே டக்கு டக்குனு முடிவு எடுப்பியதான அப்படியே எடுங்க,உங்களுக்கு தெரியாததா என்ன.ஊருக்கே நல்லதை யோசிச்சு செய்யற என் மச்சான் எது செய்தாலும் சரியாதான் இருக்கும்" என்றதும்,அதை கேட்டவருக்கு மனது லேசாக தோன்றவும் படுத்துவிட்டார்.

அங்கோ தேவாவின் அறையில் மன கலக்கத்துடன் இருந்த நித்யாவை தன்னருகில் இருத்தி வைத்தவன் அவளது கண்களைப் பார்க்க அதுவோ கலங்கி தவித்தது.

"என்ன லட்டுகுட்டி"

ஒன்னுமில்லை என்று தலையசைத்தவள் அவனது நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு,தலைசாய்க்க,அவளது கைகளெல்லாம் நடுங்கியது.

மெல்ல அவளது முகத்தினை திருப்பி எதுக்கு இவ்வளவு பயம் கலக்கம்,பதட்டம் என்று கேட்க.

"அப்பா"

"அவரால ஒன்னும் செய்யமுடியாதுமா,எதுக்கு இவ்வளவு பயம் "  

"இல்லை அவரைப் பத்தி உங்களுக்கு தெரியாது,என்ன வேணாலும் செய்வார்"

அப்படித்தான் மாமனார் கையினால போகணும்னு விதியிருந்தா என்ன செய்ய முடியும் என்ற சொன்னதும்,அவனது நெஞ்சில் குத்தியவள், ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்,அதைப் பார்த்து பட்டுகுட்டி சத்தமாக அழ ஆரம்பிக்க,ஹப்பா இரண்டு பேரையும் சமாளித்து அழுகையை நிறுத்தி தூங்கவைக்குறதுக்குள்ளாக படாதபாடு பட்டுவிட்டான்.

நித்யா அழுது அழுது அவனது தோளிலயே சாய்ந்து தூங்கிவிட,பட்டுவை தன் நெஞ்சினில் போட்டு தட்டிக் கொடுத்தவனின் கை பிள்ளையின் முதுகை தடவிக் கொடுக்க,அவனது சிந்தனை சிவசுவை என்ன செய்யலாம் என்று யோசித்து அந்த விஷஜந்துவை இனியும் உயிரோடுவிட்டாள் அது என் பிள்ளைய வரைக்கும் பாதிக்கும் என்றவன் தன் மகளை மனைவியிடம் படுக்க வைத்தவன்.

தனது மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்து பேசினான்,பேசி முடித்து நிம்மதியாக தன் மனைவியின் அருகில் படுக்க,அவளது வாசனை இப்போதுதான் அவனது நுரையீரலுக்குள் நுழைந்து மறந்து மறத்துப்போன காதல் உணர்வுகளின் எண்ணங்கள் மேலோங்கியது.

மெல்ல நித்யாவின் கன்னங்களில் உதட்டினால் தொட,அதற்கு முன்பாகவே அவனது மீசை தூரிகையாக அவனது காதலை வரைந்தது.

அதை உணர்ந்து மெல்ல தன் கண்களை விரிக்க எப்போதும் போல அந்த பார்வையில் தன்னைத் தொலைத்தவன் அவளது சிவந்த செங்காந்தள் இதழ்களை மிக மிக மெதுவாக குனிந்து தன் முரட்டு பற்களினால் கடித்து இழுத்தவன் அதில் புதைந்தான்.